சனி நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.