மக்களுக்கு திருப்தியளிக்கும் சேவைகளை வழங்கிட உள்ளூராட்சி மன்றங்களை தே.ம.சக்தியிடம் ஒப்படையுங்கள்.தலைமை வேட்பாளர் மபாஸின் அஸாஹிர்.
ஊழலற்ற, அதிகார துஷ்பிரயோகமற்ற, இலஞ்சம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களை இந் நாட்டில் தோற்றுவித்து மக்களுக்கு திருப்தியளிக்கும் சேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் மாநகர , நகர மற்றும் பிரதேச சபைகளின் அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வழங்க வேண்டும் என பேருவளை நகர சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் முஹம்மத் மபாஸீன் அஸாஹிர் தெரிவித்தார்.
ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து நகரங்களையும் கிராமங்களையும் துரிதமாக அபிவிருத்தி செய்து கொள்வதா அல்லது எதிர்க் கட்சியினருக்கு வாக்களித்து இந்த அபிவிருத்தி வேலைகளை தடுத்துக் கொள்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பேருவளை பன்னிலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி சார்பில் தலைமை வேட்பாளராக சீனன் கோட்டை வட்டாரத்தில் இவர் போட்டியிடுகிறார். அவர் மேலும் கூறியதாவது – பேருவளை நகர சபை பகுதிவால் மக்கள் இலஞ்சம், ஊழலல், அதிகார துஷ்பிரயோகமற்ற தூய்மையான நகர சபை ஆட்சியையே எதிர் பார்க்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே இதை செய்ய முடியும். எனவே மக்களின் இந்த எதிர் பார்ப்பை நிறைவு செய்ய வேண்டுமானால் மாநகர, நகர சபைகளினதும், பிரதேச சபைகளினதும் அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த இரு தேர்தல்களிலும் எதிர்க் கட்சியினரை படு தோல்வி அடையச் செய்து தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்கள்.
அதே போல் இந்த உள்ளூராட்சி தேர்தலிலும் எமக்கு பெரு வெற்றியை தர வேண்டும்எதிர்க் கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் எதிர் காலத்தை பாலாகாகிக் கொல்லாதீர்கள். இவர்கள் மாறி மாறி இந்த நகரத்தை ஆட்சி செய்தார்கள். ஆனால் என்ன தான் சாதித்தார்கள் என்பதை பற்றி சிந்தியுங்கள். மக்கள் எதிர் பார்க்கும் ஒரு சிறப்பான நிர்வாகத்தை பேருவலை நகரத்திற்கு வழங்குவோம் என்றார்.

(பேருவளை பீ.எம். முக்தார்)