சீனன் கோட்டை சாதுலிய்யா இஹ்வான்களுக்கான ஒரு நாள் வதிவிட பயிற்சி முகாம் மற்றும் ஒன்றுகூடல் 2025
பேருவளை சீனன் கோட்டை ஷாதுலியா இஹ்வான்களுக்கான ஒருநாள் வதிவிட தர்பியா ஆன்மீக நிகழ்வொன்று எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி பேருவளை அம்பேபிடிய ஸகிரு விலா வரவேற்பு மண்டபத்தில் சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயளாலரும், அகில இலங்கை ஜம்யதுல் உலமா நிறைவேற்று குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷேஹ் அல்ஹாஜ் ஏ.எச். இஹ்ஸானுதீன் (நளீமி) தலைமையில் இடம்பெறவுள்ளது. நாட்டின் முக்கிய ஸுன்னத் ஜெமா அத் வளவாலர்களால் நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளது.
நாடரிந்த பிரபல பேச்சாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்ஸி), மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அறபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ரஈஸுல் முகத்தமுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் இக்ராம் நிஸார் அல் (அல் பாஸி), கலீபதுல் ஐதுரூஸியதுல் காதிரி பிரபல இஸ்லாமிய பேச்சாளருமான மௌலவி எம்.எம்.முஸ்தகீம் (நஜாஹி) போன்ற மார்க்க ஆறிஞர்களினால் ஷாதுலியா தரீக்கா, ஆன்மிக வழிமுறைகள் பற்றி பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகளும் நடாத்தப்படும்.
சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத் முன்சிதீன்களால் கஸீதாக்களும் நடைபெறவுள்ளதாக கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷேஹ் ஏ.எச் இஹ்ஸானுதீன் (நளீமி) தெரிவித்தார்.
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.எம்.பாரூக் (மக்கி) சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலியா கலாபீட அதிபர் உஸ்தாத் மௌலவி அஸ்மிகான் (முஅய்யிதி),
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.எம். ஸைனுலாப்தீன் (பஹ்ஜி)
சீனன் கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், ஸாதாதுமார்கள்,கலீபாக்கள்,முகத்தமீன்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன செய்திப் பிரிவின் செய்தி ஆசிரியர் பஸ்ஹான் ஏ. நவாஸ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துவார்.
ஷாதுலியா தரீக்காவின் ஸ்தாபர் அல் குதுபுல் அக்பர் இமாம் நூருத்தீன் அபுல்ஹஸன் அலி அஷ் ஷாதுலி (ரலி) ஆத்மீக ஞானி இமாம் குத்புல் வுஜூத் பாஸி நாயகம் (ரலி) ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் அடைந்த உத்தம பாதையை பின் தொடர்ந்து தாமும் அந்த அடைவை அடைய வேண்டும் என்ற அந்த உயந்த நிய்யத்தோடு பாஸியதுஷ் ஷாதுலியா தரீக்காவுடைய இஹ்வான்கள் பயணிக்கின்றனர்.
ஷாதுலியா ஸ்தாபகர்களால் எமக்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையுன் அடையும் வழியாக தந்த வழீபாக்கள், அவ்ராதுகள், இந்த தரீக்காக்களின் முக்கியதும், வழீபாக்கள் அவ்ராதுகளை ஓதும் முறை அதபுகளையும் பயிற்றுவிக்கும் நோக்குடனேயே இவ் ஒரு நாள் வதிவிட நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் ஏ.எச். இஹ்ஸானுதீன் (நளீமி) அவர்களை தற்போதைய அகில உலக ஷாதுலியதுல் பாஸியா தரீக்காவின் ஷேஹு நாயகம் ஷேஹு ஸுஜ்ஜாதா அஷ் ஷேஹ் மஹ்தி பின் அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி நாயகம் அவர்கள் நியமித்ததின் பின் கலீபாதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் ஏ.எச் இஹ்ஸானுதீன் (நளீமி) அவர்கள் ஷாதுலியா தரீக்காவின் வளர்ச்சிக்காக அயராது படுபவதோடு, இஹ்வான்களை ஷாதுலியதுல் பாஸியா வழிபா, அவ்ராதுகளை ஓதுவதை வலியுருத்தியும் வறுகிறார். அதன் முதலாவது அங்கமாக ஊரின் எல்லா இஹ்வான்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இந்த நிகழ்வை நடாத்துவது சிறப்பம்சமாகும்.
இந்த வதிவிட செயளமர்வை சீனன் கோட்டை ஷாதுலியா இஃவான்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
( பேருவளை பீ.எம்.முக்தார்)