இலங்கை தோட்ட சேவையாளர் சங்க மே தின பேரணியும் கூட்டமும் 2025
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் (Ceylon Estate Staffs’ Union – CESU) தனது மே தினத்தை ‘தோட்டங்களை உயிர்ப்பித்து உரிமைகளை வென்றெடுக்கும் தொழிலாளர் சக்தி’ என்ற கருப்பொருளின் கீழ் அவிசாவளையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் 1920 இல் ஆரம்பிக்கப்பட்ட அரச, அரசு சார் மற்றும் தனியார் துறை தோட்டங்களில் உள்ள தோட்ட ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நூற்றாண்டை நிறைவு செய்த நாட்டின் பழமையான தொழிற்சங்கமாகும்.
அண்மைக்கால வரலாற்றில், உழைக்கும் மக்களின் அபிலாஷைகளுக்குப் பதிலாக, பாகுபாடான அரசியல் நோக்கங்களுக்காக சர்வதேச தொழிலாளர் தினம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. எமது மே தினம் 1886ல் எட்டு மணி நேர வேலைக்காக உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடித் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்ட போர்க்குணமிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் தலைவர்களை நினைவுகூரும் / அவர்களின் உன்னதமான உயிர் தியாகத்தை போற்றவும், உழைக்கும் வர்க்கத்தின் எதிர்கால அபிலாஷைகளை உயர்த்தவும் கொண்டாடப்படுகிறது என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைமை செயலாளர் சத்துர சமரசிங்க தெரிவித்தார்.