உள்நாடு

அரசின் பொய் வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாறக் கூடாது.அம்பேபிட்டிய வேட்பாளர் என்டன் சுரேஷ்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் மக்களுக்கு அள்ளி வீசிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மீண்டும் உள்ளுராட்சி தேர்தலில் பொய்வாக்குறுதிகளை கூறி மீண்டும் மக்களை ஏமாற்ற முயல்கிறது.

இவற்றுக்கு மக்கள் ஏமாறிவிடக்கூடாது என பேருவளை பிரதேச சபை அம்பேபிட்டிய வட்டார வேட்பாளர் என்டன் சுரேஷ் தெரிவித்தார்.

பேருவளை கரந்தகொடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது பேருவளை அம்பேபிட்டிய வட்டாரம் இரட்டைத்தொகுதியைக் கொண்டதாகும்.

இம் முறை தேர்தலில் நானும் சகோதரர் முஹம்மத் நபாயிஸ{ம் போட்டியிடுவதோடு முஹம்மத் யாஸ்மீன் போனஸ் (பட்டடியல்) உறுப்பினராக உள்ளார். இந்த வட்டாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைப்பதன் மூலம் நாம் மூவரும் இணைந்து சிறப்பான சேவைகளைப் பெற்றுக் கொடுப்போம். ஹேன மரக்களாவத்த , கரந்தகொட, எகொடவத்தை, பன்னில, அம்பேபிட்டிய மற்றும் புபுலவத்த பகுதிகளை ஒன்றினைத்து இந்த வட்டாரம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால தேர்தல்களில் இந்த வட்டார மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனே கைகோர்த்து நின்றனர். இந்த தேர்தலிலும் பேருவளை பிரதேச சபையின் நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க முழு பேருவளை மக்களும் அணிதிரண்டுள்ளனர். இந்த வட்டாரத்தில் போட்டியிடும் நானும் முஹம்மத் நபாயிஸ{ம், போனஸ் (பட்டியல்) வேட்பாளர் முஹம்மத் யாஸ்மின் யாஸீனும் சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

(பேருவலை பீ.ம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *