உலக தடகள அஞ்சல் ஓட்டம்..! இலங்கை அணி விபரம்..!
சீனாவின் குவாங்சோவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 4 * 400 கலப்பு அஞ்சல் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி தகுதிபெற்றுள்ள நிலையில் அதற்கான இலங்கை வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இப் போட்டி எதிர்வரும் மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறும் எனவும் இது உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் 7வது கட்டமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது