ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு கட்டாய போஸ்ட் மோர்ட்டம் சுற்றுநிரூபத்தை மீளப்பெற்றது நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு..!
25/04/2025 என தேதி இடப்பட்டு சகல திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கும் (Coroner) அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு கட்டாயம் உடற்கூற்று பரிசோதனை (Postmortem) மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தில் மேலதிக விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படாமையால் பல சர்ச்சைகளை உண்டாக்கியது.
இது சம்பந்தமாக Sunday times செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட இது பல விமர்சனங்களுக்கு உள்ளானது. செய்தியை கீழே காண்க.
இதனை அடுத்து இன்றைய தேதியிட்டு (28/04/2025) அனைத்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கும் (Coroner) அனுப்பப்பட்ட கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது
வயது 5க்கு குறைந்த குழந்தைகளின் மரணத்திற்கான மரண பரிசோதனை (Postmortem) செய்யாதிருத்தல் சம்பந்தமாக:
மேற்படி விடயம் சம்பந்தமாக 25/04/2025 தேதி இடப்பட்ட எனது கடிதத்தை இத்தால் இரத்து செய்கிறேன்.
அதில் உள்ள உள்ளடக்கங்கள் பற்றியும் தீர்மானம் பற்றியும் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அக்குழுவினரின் பரிந்துரைகள் பெறப்படும் வரை இத்தீர்மானமானத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

