விசாரணை முடிந்து வெளியேறிய ரணில்..!
இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் அவர் ஆஜராக முடியாது என்று தெரிவிக்கப்பட்டு, இன்று ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.