உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் சிலர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *