செளபாக்கியம் நிறைந்த பகுதியாக பேருவளையை மாற்றுவதே சுயேட்சை அணியின் இலக்கு..! -வேட்பாளர் இஷாக் மர்ஜான் பளீல்
பேருவளை நகர சபை பகுதியை அபிவிருத்தி செய்து மக்களுக்கு சௌபாக்கியம் நிறைந்த பிரதேசமாக மாற்றுவது சுயேற்சை அணியின் பிரதான இலக்காகும் என பேருவளை நகர சபை தேர்தலில் சுயேற்சை அணி சார்பில் சீனன் கோட்டை வட்டாரத்தில் போட்டியிடும் இஷாக் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
சீனன் கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடாக சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்று கொடுப்பதே எமது பிரதான நோக்காகும்.
புதிய தொழில்நுட்பத்தின்னுடாக மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைய மேம்படுத்தி தென்னிலங்கையில் அபிவிருத்தியடைந்த அழகான, தூய்மையான நகரமாக பேருவளையை நாம் மாற்றி அமைப்போம். இதற்கான சந்தர்ப்பத்தினை எங்களுக்கு மக்கள் வழங்க வேண்டும் அதன் மூலம் மக்களுக்கு சௌபாக்கியம் நிறைந்த பிரதேசமாக நாம் பேருவளையை மாற்றியமைப்போம்.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கல்வி,சுகாதார, விளையாட்டுத்துறை, கைத்தொழில் மீன்பிடி உல்லாசப் பயணத்துறை, இரத்தினக்கல் வர்த்தகத்துறையை கட்டியெழுப்ப என்னிடம் பாரிய வேலை திட்டங்கள் உள்ளன. இவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த சுயேற்சை அணியை வெற்றி பெறச் செய்யுங்கள். மோட்டார் சைக்கிள் சின்னத்தை தெரிவு செய்து சிறப்பான சேவைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
(பேருவளை பி.எம் முக்தார்)