பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று..! இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு..!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று ரோமின் சென் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.இலங்கை நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது.பின்னர் பாப்பரசர் பிரான்சிஸ் பூதவுடல் சென் மேரி தேவாலயத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும்,நாடுகளின் விஷேட பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கின்றார். இதேவேளை பாப்பரசரின் மறைவையொட்டி இன்று இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.