தொடர் சாதனைகள் படைத்து வரும் பிறைந்துறைச்சேனை சாதுலியா மாணவர்கள்..!
விளையாட்டுத் துறையில் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் தொடராக சாதனைகளை நிலை நாட்டி வருவதாக பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தெரிவித்தார்.
அந்தவகையில், நடைபெற்று வரும் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதுலியா வித்தியாலய 16 வயதுக்குட்பட்ட காரப்பந்தாட்ட அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 18 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணியினரும் கோட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தங்களது திறமைகளை திறன்பட வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளைர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
