ஜனாதிபதி அனுர குமார நாளை பேருவளை வருகிறார்..!
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேருவளைக்கு விஜயம் செய்கிறார்.
பேருவளை நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேருவளை நகர பீச் விளையாட்டரங்கில் பி.ப. 4.00 மணிக்கு நடைபெறும் மா பெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசானாயக உரையாற்றவுள்ளார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்தி கமிடி தலைவருமான சமிந்த ஹெட்டியாரச்சி , களுத்துறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுகுழு உறுப்பினரும் முன்னாள் நகர சபை உருப்பினருமான அரூஸ் அஸாத் , பேருவளை நகர சபை தேசிய மக்கள் சக்தி தலைமை வேட்பாளர் ம்பாஸீன் அஸாஹிர் உட்பட தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் பலரும் இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.
(பேருவளை பீ.எம். முக்தார் )