சமூக சேவையாளர் ரியாஸ்தீன் சைக்கிள் சின்னத்தில் போட்டி..!
பேருவளை மஹககொடை அஹதிய்யா பாடசாலையின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் ஏ.ஐ.எம்.ரரியாஸ்தீன் பேருவளை நகர சபை தேர்தலில் சுயேற்சை குழு மோட்டார் சைக்கிள் சின்னம் ) சார்பில் பட்டியலில் போட்டியிடுகிறார்.
அகில இலங்கை சமாதான நீதிவானான இவர் களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவை சங்கத்தின் உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.
சமூக சேவைக்காக தன்னை அர்ப்பணித்துள்ள இவர் களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவை சங்க முன்னாள் செயலாளர் மர்ஹும் இமாம்தீன் ஹாஜியாரின் புதல்வராவார்.
அஹதிய்யா பாடசாலையினூடாக மஹககொடை பகுதியில் பல கல்வி, சமய,சமூக பணிகளில் ஈடுபட்டுள்ள இவர் அஸாம் பலீல் தலைமையிலான சுயேற்சை அணியில் மோட்டார் சைக்கிள் சின்னத்தில் பேருவளை நகர சபைக்கு பட்டியல் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இது குறித்து ஏ.ஐ.எம். ரியாஸ்தீன் கூறியதாவது நடைபெறவுள்ள நகர சபை தேர்தலில் பேருவளை நகர சபையை சுயேற்சை நிச்சயம் கைப்பற்றும்.
முன்னாள் சசுகாதாரஅமைச்சர் Dr.ராஜித ஸேனாரத்ன மற்றும் எம். பி.மர்ஜான் பளீல் அவர்களின் வழிகாட்டல்கலுடன் சிறந்ததொரு வேட்பாளர் குழு இம்முறை நகர சபை தேர்தலில் சுயேற்சை அணி சார்பாக போட்டியிடுகிறது.
சுயேற்சை அணியின் வெற்றிக்காக இன்று முழு பேருவளை வாழ் மக்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டுள்ளனர்.நகர சபையூடாக மக்களுக்கு சிறந்த பல சேவைகளை நாம் எதிர் காலத்தில் முன்னெடுப்போம் என்றார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)