ஆளுங்கட்சியை ஆதரித்து அபிவிருத்தியின் பங்காளராகுங்கள்..! -கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் ஜவாத் வாக்காளர்களுக்கு அறைகூவல்.
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து பிறகு கைசேதப்படுவதை விட ஆளுங் கட்சிக்கு வாக்களித்து அபிவிருத்தியின் பங்காளராகுங்கள் என் கஹட்டோவிட்ட வட்டார தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஜவாத் வாக்காளர்களுக்கு அறைகூவல் விடுத்தார். ஓகொடபொலவில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியை பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டச் செய்த நாங்கள் இந்த குட்டித் தேர்தலில் அரசாங்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவோமாயின் அவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்.வாக்குகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கி அரசின் எதிர்ப்பை சம்பாதிப்பதா அல்லது அரசுக்கு ஆதரவளித்து அபிவிருத்தியின் பங்காளராவதா என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.எமது வட்டாரத்தில் ஆளுங்கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் ஊருக்கான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உரிமையுடன் பேச முடியும்.இதற்கு மேலதிகமாக அரசின் மூலமாக மேலும் பல்வேறு உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த வட்டாரத்தில் ஏறத்தாழ 7500 வாக்குகள் உள்ளன.கஹட்டோவிட்டவில் 2100 வாக்குகளே இருக்கின்றன.ஏனைய 4400 வாக்குகளும் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப் போகிறது.தீர்மானிக்கும் இந்த வாக்குகள் ஆளுங்கட்சிக்கு சார்பாகவே உள்ளன.எனவே இந்த வட்டாரத்தை தேசிய மக்கள் சக்தியே வெல்லுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் வேட்பாளர் இன்ஷாப் உட்பட மேலும் பல கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.