மருதானை பாஸிய்யா ஸாவியாவில் பெரிய கந்தூரி
இலங்கையின்.முதலாவது பள்ளிவாசலான 1100 ஆண்டுகள் பழமைமிகு பரலாற்றுப் புகழ்மிக்க பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசளுடன் இணைந்த பாஸிய்யா ஸாவியாவில் 158வது ஷாதுலிய்யா மனாகிப் தமாம் பெரிய கந்தூரி மஜ்லிஸ் எதிர் வரும் 28-4-2025 திங்கட்கிழமை மாலை கலீபதுல் க்ஹுலபா முஹம்மது ஸுஹ்ர் மௌலவி பாரி அவர்களின் தலைமையில் நடைபெறும்.

ஷாதுலிய்யாத் தர்க்காவின் கலீபதுல் க்ஹுலபாவும் காலி அலிய்யா இஸ்லாமிய சட்டக் கல்லூரி பணிப்பாளரும் காலி மாவட் ஜம்மியத்துல் உலமாவின் தலைவருமான சங்கைக்குறிய மெளலவி அல்-ஹாஜ் எம். இஸட் எம். முஹம்மத் ஸுஹ்ர் (பாரி) விசேட சொற்பொழிவாற்றுவர்.
மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் ஜமாஅத் சபை தலைவர், முன்னாள் இலங்கை வக்ஃப் சபை தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி, அல்-ஹாஜ் தேசமான்ய எம்.ஏ.எம்.ஹனபி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பள்ளிவாசல் மற்றும் ஸாவியா நிர்வாக குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் ஆத்மீக ஞானி அல் குத்தல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதுலி (ரலி) அவர்களின் 860வது ஜனன தினத்தை முன்னிட்டும், ஆத்மீக ஞானி பாஸி நாயகம் (ரஹ்) அவர்களின் ஞாபகர்த்தமாகவும் இந்த மனாகிப் மஜ்லிஸ் மேற்படி ஸாவியாவில் 158வது வருடமாகவும் இடம் பெறுவதாக ஸாவியா தர்மகர்த்தாக்களின் ஓருவரான அல்-ஹாஜ் எம்.பயாஸ் ஜெஸூல்(ஜே.பி.) தெரிவித்தார்.
மேற்படி மனாகிப் மஜ்லிஸ் கடந்த 19ம் திகதி மாலை மௌலவி க்ஹலீபதுஷ்ஷாதுலி அல் ஹாஜ் ரபீக் பஹ்ஜி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. தினமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழ்மாலை ஆகிய ஹம்ஸிய்யாவும் மனாகிபுஷ் ஷாதுலி புகழ்மாலை ஓதப்படுவதுடன் எதிர்வரும் 28ம் திகதி தமாம் நிகழ்வு தந்தூரியுடன் நிறைவு பெறுகிறது.
கலீபதுஷ்ஷாதுலி அல்ஹாஜ் அஸ்ஸய்யித் அலவி மௌலானா முர்சி, சீனன் கோட்டை ஜாமியத்துல் பாஸி யதுஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்ஹாஜ் எம். ஜே. எம். பஸ்லான் ஜெஸுல் (அஷ்ரபி – பீ.ஏ) அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை நிறை வேற்றுக் குமு உறுப்பினர் கலீபதுஷ்ஷாதுலி அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) கல்பதுஷ்ஷாதுலிகளான மெளலவிகள் எம்.எம்.ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி) முஹம்மத் இல்யாஸ் ஆலிம் எம்.ஐ.எம் .பாறூக் (மக்கி) மஸ்ஜிதுல் அப்ரார் இமாம்களான மௌலவி முகர்ரம் அஸ்ஹரி மௌலவி நிசாத் அலவி , முஹம்மத் அல்பாஸி கல்லூரி அதிபர் மௌலவி பைஸல் காமில் ஸக்காபி உட்பட கலீபாக்கள், உலமாக்கள் இஹ்வான்கள், பள்ளிவாசல் மற்றும் லாவியா நிர்வாகிகள் என பலரும் தமாம் மஜ்லிஸில் பங்கு பற்றுவர்.


( பேருவளை பீ. எம். முக்தார்)