நீதிமன்ற அறையிலிருந்து ஊடகவியலாளர் பசீர் முஹம்மத் வெளியேற்றம்..! நடவடிக்கை எடுக்குமாறு தகவல் திணைக்களம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை..!
இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தின் செயலாளரான ஃபசீர் முகமது அவர்கள் குளியாபிட்டிய மாஜிஸ்டிரேட் நீதிமன்றில் செய்தி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் அவரது செய்தி திரட்டும் பணிக்கு தடைகள் ஏற்படுத்தியதோடு, அவரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியே தள்ளியும் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு “அவந்தரா” என்ற ஹோட்டலில் கொள்ளையடித்ததாக கூறி, ஒரு நகைக் கடையின் உரிமையாளரை துன்புறுத்தி, அவரது சொத்துக்களை கொள்ளையடித்தது தொடர்பாக பொலிஸார் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு நேற்று (24) நடைபெற்ற நேரத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஃபசீர் முகமது மட்டுமே இன்றைய இந்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றில் இருந்த ஒரே ஊடகவியலாளர் என்றும் அறிய வருகிறது.