தலதா வழிபாடு நிகழ்ச்சியை 27 ஆந் திகதியுடன் நிறைவு செய்யத் தீர்மானம்..!
திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் திகதி ‘ தலதா வழிபாடு நிகழ்ச்சியை நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.
இன்று (25) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை விடுத்த போதே தியவதன நிலமே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த திகதி நீடிக்கப்படலாம் என்ற கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்நாட்டு பௌத்தர்களின் சிகரமாக விளங்கும் பெருமதிப்புக்குரிய ஸ்ரீ தலதாவை தரிசிக்கும் பெரும் வாய்ப்பு கடந்த 18ஆம் திகதி தொடக்கம் இலங்கையர்களுக்குக் கிடைத்தது. இந்த திகதியை நீடிக்கும் திட்டம் இல்லை என்றும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ரஷீத் எம். றியாழ்)