வாழைச்சேனை நஹ்ஜிய்யாவின் நீண்டகால குப்பை பிரச்சினைக்கு தீர்வு
வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியில் நீண்டகாலமாக இருந்து வந்த திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மிக நீண்டகாலமாக நிலவி வந்த குறித்த பிரச்சினைக்கு வாழைச்சேனை வர்த்தக சங்கத்தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.எஸ்.றபீக் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக இதற்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜ்கீதனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக இதற்கான தீர்வு எட்டப்பட்டுள்ளதுடன், வாரத்தில் மூன்று தினங்கள் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படுமென பிரதேச சபை செயலாளர் உறுதியளித்துள்ளதுடன், ஆரம்பக்கட்டமாக இன்று திண்மக்கழிவகற்றல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த நீண்டகாலப்பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத் தந்த வாழைச்சேனை வர்த்தக சங்கத்தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.எஸ்.றபீக் மற்றும் சபையின் செயலாளர் எஸ்.ராஜ்கீதன் ஆகியோருக்கு கல்லூரி நிருவாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.




(எஸ்.எம்.எம்.முர்ஷித்)