பாடசாலை மாணவிகளை மண்டியிட வைத்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு
சுகவீனம் காரணமாக காலை விளையாட்டுப் பயிற்சியில் பங்கேற்கவில்லை என தெரிவித்து கெக்கிராவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் குழுவொன்றை பாடசாலை முடியும் வரை மண்டியிட்டு வைத்த சம்பவம் தொடர்பில் மாணவிகளின் பெற்றோர் மொரகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாடசாலை ஆசிரியர் ஒருவர் விளையாட்டு பயிற்சிக்கு வரவில்லை எனக்கூறி 6 ஆம் தர மாணவிகள் பலரை காலை முதல் பாடசாலை முடியும் வரை வெயிலில் மண்டியிட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மொரகொட பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது மகள் பாடசாலை விளையாட்டு நடவடிக்கையில் பங்கேற்க விரும்பாத நிலையில் பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியை ஒருவர் காலை முதல் பிற்பகல் 1.30 வரை மண்டியிட வைத்ததாக மாணவி ஒருவரின் தந்தை தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)