சுற்றுலா பயணிகளுக்காக உயிரைக் கொடுத்த காஷ்மீர் இளைஞன்
காஷ்மீரின் பஹல்காமில் ஆயுததாரிகளிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக துப்பாக்கியை பிடுங்க முயற்சித்திருக்கிறார் அப்பகுதியில் குதிரைக்காரராக பணியாற்றும் சையத் அடில் ஹுசைன். இதனால் கோபமடைந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
குதிரை சவாரி மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது ஏழைக் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் இஸ்லாமியர் சையத் அடில் ஹுசைன் ஷா.
“என் மகன் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம் என தெரியவில்லை.” என மரணம் அடைந்த தனது மகன் குறித்து அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.