உள்நாடு

அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ வட்டாரத்தில் தேர்தல் பணிகள் தீவிரம்

அனுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச சபை தேர்தலில் அழுத்கம , அசறிக்கம, கம்பிரிகஸ்வெவ மற்றும் ஹெலம்பகஸ்வெவ ஆகிய கிராம அலுவலர் பகுதியை உள்ளடக்கிய கம்பிரிகஸ்வெவ வட்டாரத்தில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ,சீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன .இருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகின்றது.

இந்த வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன் முசாதிக் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இஸ்மாயில் அஷ்ரப் உள்ளிட்ட இருவரும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.தேர்தல் நெருங்கிக்  கொண்டு வரும் நிலையில் வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குகளை பெற்றுக்கொள்ளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இந்த வட்டாரத்தில் போட்டியிடும் கட்சி சார்ந்த வேட்பாளர்கள் தான் சார்ந்த கட்சியே வெற்றி பெறும் என்ற நோக்கில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரும் வீடுவீடாகச் சென்று வாக்குகளை தேடுவதையும்  அவதானிக்க கூடியதாகவுள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *