சுயேட்சை குழு -01 கால்பந்து சின்னத்தின் தலைமை காரியாலயம் திறந்து வைப்பு
சுயேட்சை குழு -01 கால்பந்து சின்னத்தின் தலைமை காரியாலயம் சாளம்பைக்கேணி வடக்கு வட்டாரம் ஆலடி சந்தியில் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இரட்டை தொகுதிகளை வென்றெடுப்பதற்கு பிரபல சமூக சேவையாளர் எம். ஏ. நளீர் கால்பந்து சின்னத்தில் களமிறங்கியுள்ளார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்..
தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசத்தில் மக்களுக்கு உயரிய சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தான் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
சாளம்பைக்கேணி வடக்கு வட்டார மக்கள் தனது வெற்றிக்காக வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள். அவர்கள் என்றும் என்னுடனே இருப்பார்கள். நான் அவர்களுக்கு முடியுமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பேன். அவர்களுக்காக எனது வீட்டின் கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும். விசேடமாக ஊரின் அபிவிருத்திக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், மக்களின் வாழ்வாதார வசதிகளுக்கும் தான் பெரும் பங்காற்றி இருப்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
இதன் அடிப்படையில் எமது வெற்றிக்காக விளையாட்டு கழக உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரச தனியார் துறை ஊழியர்கள் என அனைவரினதும் பங்களிப்பின் மூலம் எதிர்வரும் தேர்தலில் வெற்றியீட்டுவதன் ஊடாக வட்டார மக்களுக்கு மாத்திரமன்றி சகல மக்களுக்கும் தமது சேவைகளை திருப்திகரமாக வழங்க முடியும் என சுயேட்சை குழு கால்பந்து சின்னம் தலைமை வேட்பாளர் எம்.ஏ நளீர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு உண்மைக்கு உண்மையாக சமூகத்துக்கு சேவையாற்ற கூடிய ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் எமது கால்பந்து சின்னத்துக்கு வாக்களித்து இரட்டை தொகுதிகளை வென்றெடுக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.கே அப்துல் சமத், தேச சபை முன்னாள் உறுப்பினர் சுபைதீன், கால்பந்து சின்னம் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


( எ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் )