நேர்மையான ஊழலற்ற ஒரு பிரதேச சபையினை உருவாக்கிட, மாம்பழ சின்னத்துக்கு வாக்களியுங்கள்
தபால் மூல வாக்காளர்களுக்கு!
உதுமான் கண்டு நாபிர்

அரச சேவையில் நேர்மையாக பணிபுரியும் நீங்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டிய இத்தர்ணத்தில் தங்களது தீர்மானம் எமது பிரதேச சபையின் எதிர்காலத்தினை கருத்தில் கொள்வது மிக முக்கியமானது எனவும் நேர்மையான ஊழலற்ற ஒரு பிரதேச சபையினை உருவாக்கிட, எனது சின்னமான சுயேட்சைச்குழு – 01, மாம்பழ சின்னத்துக்கு வாக்களியுங்கள் என டாக்டர் உதுமான் கண்டு நாபிர் தெரிவித்தார்.
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுயேட்சைக்குழு -01, மாம்பழச்சின்னத்தில் களமிறங்கியுள்ள டாக்டர் உதுமான் கண்டு நாபிர்,
தபால் மூலமான வாக்காளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்பான தபால்மூல வாக்காளர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம்
இம்முறை எமது பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எமது சமூகத்தின் எதிர்காலத்தின் தலை எழுத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலாகும்.
அரச சேவையில் நேர்மையாக பணிபுரியும் நீங்கள் சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டிய இத்தர்ணத்தில் தங்களது தீர்மானம் எமது பிரதேசசபையின் எதிர்காலத்தினை கருத்தில் கொள்வது மிக முக்கியமானது நல்ல திட்டங்களுடன் ஊழலற்ற நேர்மையுடன் தன்னையே அர்பணிக்கக்கூடிய சமூகசிந்தனையுள்ள உறுதியான முற்போக்கு கொள்கையுள்ள திடகாத்திரமான ஓர் அணி எமது பிரதேச சபையை ஆள்வது இன்றியமையாததது. அப்படிப்பட்ட ஓர் அணியே எனது அனுசரணையின் கீழ், சுயேற்சைக்குழு! மாம்பழச்சின்னத்தில் உங்கள் முன் களமிறக்கப்பட்டுள்ளது.
எனவே, எமது பிரதேச சபையின் எதிர்காலம் சிறப்பாக அமைய தங்களது பொன்னான தபால்மூல வாக்குகளை எனது அனுசரணையில் கீழ் மாம்பழச்சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைக்குழு – 01 இற்கு வாக்களிப்பதன் மூலம் நேர்மையான ஊழலற்ற ஒரு பிரதேச சபையினை உருவாக்கிடுவோம்.
நேர்மையான உங்களைப் போன்ற அரச ஊழியர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்று சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றக்கூடிய ஒரு பிரதேச சபையினை அமைத்திட எங்களுடன் கைகோர்த்து தங்கள் ஆதரவைத் தாருங்கள்.
வெற்றியின் சின்னம்! மாம்பழச்சின்னம்!
உங்களின் வாக்கு சுயேற்சைக்குழு-01 இற்கு
என்றும் உங்கள் இனிய, டாக்டர் யூ.கே. நாபிர் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)