துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இஸ்தான்புல்லில் 6.2 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை (AFAD) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாகவும், மேலும் நகரத்தின் பல கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.