வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்புக்கு 2 கோடி 89 இலட்சம்; பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி
பேருவளை மருதானை வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்பு பணிக்காக 2 கோடி 89 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இந்த கால்வாய் புனரமைப்பு வேலைகள் இம்மாதம் 24ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சீனங்கோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.
பேருவளை நகரசபை பகுதியில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாக வத்திமிராஜபுர கால்வாய் திகழ்கிறது. இந்த கால்வாயை புனரமைத்து சிறந்த சுற்றாடலுடன் சூடிய பகுதியாக மாற்றியமைப்போம்.
இப்பகுதி வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நகரசபையினூடாக நிறைவேற்ற வேண்டி எதிர்வரும் தேர்தலில் தேசிமக்கள்சக்தி அதிகாரம் உள்ள நகர சபையை தெரிவுசெய்யுங்கள் என்றும் அவர் கூறினார்.
(பேருவளை பீ.எம். முக்தார்)