கொழும்பு மாநகர சபை சுயேட்சை குழு 4 இன் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.
கே.ரீ.குருசுவாமி முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பிணர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்தாபகர் விவேகா பயிற்சி நிலையம் மற்றும் பழ புஸ்பநாதன் இணைத் தலைவர்களாக கொண்ட கொழும்பு மாநகர சபையில் சுயேட்சைக்குழு 4 ல் லாந்தர் விளக்கு சின்னத்தைக் கொண்டு கொழும்பு 01 தொடக்கம் 15 வரையில் உறுப்பினர்கள் கொழும்பில் 47 வாட்டுக்களிலும் போட்டியிடுகின்றனர். இக்குழுவின் தேர்தல் விஞ்ஞாபனமும் வேட்பாளர்கள் அறிமுகம் கொழும்பில் 22 ஆம் திகதி நடைபெற்றது.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கே. ரீ. குருசுவாமி –
கொழும்பில் எங்களது தேர்தல் விஞ்ஞாபனம் நல்லதை செய்தோம், நல்லதை செய்வோம் என்ற நோக்கோடு வெளியிடுகின்றோம். இலங்கையின் வரலாற்றில் வடகிழக்கு மலையகம் தவிர்ந்த தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாநகரம் கொழுப்பாகும். நாம் இரண்டாவது சிறுபான்மையாக கொழும்பில் வாழ்கின்றோம். தமிழ் ஓருவர் மேயராகவோ பிரதிமேயராகவோ வரக்கூடிய சா்ந்தர்ப்பம் இருந்து வருகின்றது ஆனால் கடந்த காலங்களில் கொழும்பு மாநகர சபையில் தேசிய கட்சிகளுக்கு நாம் ஆதரவு வழங்கினால் பிரதி மேயர் பதவி வேற்று சமூகத்தினருக்கு கிடைத்து வருகின்றது. கொழும்பில் வாழும் தமிழ் வாக்காளர்கள் சற்று சிந்தித்து இம்முறை செயலாற்றினால் 47 வாட்டிலும் 10-15 தமிழ் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. ஆகவே கொழும்பில் வாழும் சகல தமிழ் சமூகம் எமது லாந்தர் விளக்கு சின்னம்
எமது சுயேட்சைக்குழு 66 உறுப்பினர்களும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்வில் நேர்மையாக செயல்பட்ட பலரை அடையாளங்கண்டு எதிர்காலத்திலும் அவர்கள் அவவ்வாறே சமூக பணியில் ஈடுபட உள்ளனர். நீங்கள் எந்தவிதமான பிரதியுபகாரம் செய்யப்பட்ட கடந்த காலங்களிலும் இருமுறை மாநகர சபையில் மாகாண சபையிலும் கொழும்பில் பல்லாண்டு காலம் வாழும் தமிழ் சமூகத்திற்கு குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் 90 வீதமான நிதி ஒதுக்கீடுகள் அபிவிருத்திகளை கடந்த காலத்தில் கொழும்பில் கல்வித்துறையில் சேவை செய்துள்ளேன்.
என குருசுவாமி தெரிவித்தார்.
எமது கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்திற்கு விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், விளையாட்டு உடற்பயிற்சி நிலையங்கள் இல்லை. வசதி குறைந்த அவர்கள் கல்வியை தொடர முடியாமல் தவிக்கிறார்கள். மற்றும் கஷ்டப்பட்டு முன்னேறி படித்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் அநேக மாணவ மாணவிகளுக்கு வசதி வாய்ப்புகள் முறையாக கிடைக்காததால் இடைநடுவில் தங்கள் உயர் கல்வியை நிறுத்தி விட்டு சாதாரண வேலைகளில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
ஓர் சமூகம் நிலைத்திருக்க வேண்டுமானால் அவர்களுடைய கலை கலாச்சாரம் மொழி பாதுகாக்கப்பட வேண்டும். இவ் உயரிய நோக்கத்தை கொண்டு அறிவொளி மன்றம் நிறுவி வட கொழும்பு தமிழ் கலை விழா என்ற பெயரில் இலங்கை தமிழ் அறிஞர் பெருமக்களின் தமிழகத்திலிருந்து பல அறிஞர் பெருமக்களை வரவழைத்து தமிழ் விழாக்கலை நடத்தியதோடு சமூக தொண்டாற்றிய விருது வழங்கி கௌரவித்துள்ளது உள்ளோம்.
ஆகவே தான் கொழும்பில் வாழும் சகல தமிழ் சமுகங்களும் லாந்தர் விளக்கு சின்னம் சுயேட்சைக் குழு 04 கினை ஆதரவு அளியுங்கள். கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் தமக்குரிய அபிவிருத்தியை சேவையை நாங்கள் எவ்வித கள்ள கபடமற்ற உன்னத சேவையை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் இணைத் தலைவர் பழ புஸ்பநாதன் சமுக ஆர்வலர் விவேகா பயிற்சி நிலையத்தின் தலைவர் ஊடகவியளார் மத்தியில் கருத்தை தெரிவித்தார். அத்துடன் ஏனைய உறுப்பினர்கள் அறிமுகமும் நடைபெற்றது. எதிரே உள்ள 10 நாட்களுக்குள் மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்புக்கள் ஊடக நண்பர்கள் நிறுவனங்களிடம் உள்ளது அதனை செய்து தருமாறு அன்பாக கேட்டுக் கொண்டார் .
இம் மாநாட்டில் செல்லச்சாமி திருக்கேஸ்வரன், லயன்ஸ் சந்திரசேகர், எம். தேவராசன், ஊடகவியலாளர் ஸ்டீபன், உடகுருசுவாமி முன்னாள் கொழும்பு மாநகர மாகாண சபை உறுப்பிணர் ஊடக சந்திப்பு.
(அஷ்ரப் ஏ சமத்)