உள்நாடு

புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதியின் இரங்கல் செய்தி

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இரக்கம், நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு, எதிர்வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *