உள்நாடு

புத்தளத்தில் சக வாழ்வுக்கான நினைவு கூறல் மற்றும் நினைவுச் சின்னம் திறந்து வைக்கும் நிகழ்வு

புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகமும், மகளிர் எழுச்சி குரல் சங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆ பள்ளி வாசல் வளாகத்தில்
1990ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக வடமாகாணத்திலிருந்து விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இம் மக்களை புத்தளம் மக்கள் வரவேற்று அரவணைத்தனை நன்றி உணர்வோடு நினைவு கூறும் வண்ணம் இலங்கை வரலாற்றில் முதலாவது நினைவுச் சின்னமாக புத்தளத்தில் இது திறந்து வைக்கப்பட உள்ளது.

புத்தளம் பாலாவி பெண்கள் நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜூவைரியா தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வானது ஒரு வரலாற்று சான்றாகவும் அமையும்.

அன்றைய
இந்த பலவந்த வெளியேற்றமானது ஒரு சம்பவமாக இருக்கக்கூடாது இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்பட வேண்டும். எமது எதிர்கால சந்ததிகளுக்கும் கதை கூறுவதற்கான வரலாற்று மூலாதாரமாகவும் அமைய வேண்டும் என்ற அடிப்படையிலும் குறித்த நினைவுச்சின்னமானது அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *