உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி; எதிர்க்கட்சிகள் விஷேட பேச்சு, கொள்கையளவில் இணக்கம்
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் நிறைவின் பின் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பாக இடம்பெற்ற முதற் கட்ட பேச்சுவார்த்தையின் போது சகல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசைக் கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரசியல் பிரமுகரொருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் கிடைக்காதென எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. எனவே தான் கூட்டணி அமைத்து சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் இப்போதே திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.