அம்பேபிட்டிய வட்டாரத்தில் மூன்று சமூக சேவையாளர்கள் போட்டி
பேருவளை பிரதேச சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பேபிட்டிய வட்டாரத்தில் (இரட்டை அங்கத்தவர் தொகுதி) மூன்று சமூக சேவையாளர்கள் இம் முறை களமிறங்கியுள்ளனர்.
போல்கொடுவ ரோமன் கத்தோலிக்க தேவாலய செயளாளர் என்டன் சுரேஷ், அம்பேபிட்டிய பகுதியைச் சேர்ந்த பிரபல சமூ சேவையாளர் முஹம்மத் நபாயிஸ் ஆகியோர் போட்டியிடுவதோடு பெருகமலையைச் சேர்ந்த முன்னணி சமூக சேவையாளர் முஹம்மத் யாஸ்மின் யாஸீன் போனஸ் (பட்டியல்) வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
அம்பேபிட்டிய, பன்னில, கரந்தகொடை, எகொடவத்த, புபுலவத்த, ஹேன மற்றும் மரக்களாவத்த ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய (அம்பேபிட்டியவ ட்டாரம்) சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் ஒரு பிரதேசமாகும்.
இந்த வட்டார மக்களுக்கு உயரிய சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பிரதேச வாழ் மூவின மக்களினதும் வேண்டுகோளின் பேரில் இந்த மூவரும் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)