சமூகப்பணியை ஆரம்பித்த ஸ்கை தமிழ்- கிழக்கு புற்று நோயாளர்கள் பராமரிப்பு நிலையத்திற்க்கு விஜயம் செய்த குழுவினர்.
இலங்கை மற்றும் இந்தியா,கத்தார் ஆகிய நாடுகளில் ஊடகப்பணியாற்றிவரும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு தனது ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதயம் எனும் சமூக சேவைகளுக்கான புதிய திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் வழிகாட்டலில் ஸ்கை தமிழ் சமூக சேவை குழுவினர் சனிக்கிழமை (19) ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் நிலைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கான பகல் உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பொதியும் வழங்கி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் இதயம் சமூக சேவை திட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.பஹத் ஜுனைட் தலைமையில் இடம்பெற்ற இத்திட்டத்திற்கான
நிதி உதவிகளை பிரபல தனவந்தர் புரவலர் நாடறிந்த சமூக சேவைகர் செயற்பாட்டாளர் ஹாசிம் உமர் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் “இதயம்” சமூக சேவை திட்ட குழுவினரான ஜபீர் எம்.மஹ்ரூப், எம்.எ.எச்.அஸ்ரி,எம்.ஜே.ஜவ்ஸான் அஹமட், எம்.எச்.எம். ஷிப்கான், எம்.யூ.எம். வசீம்,ஏ.எச்.எம்.ஹாரீஸ்,எம்.பாரிஸ் அமானுல்லாஹ், எம்.ஏ.ஏ.எப்.ஷிம்றா, எம்.எம்.எப்.பனாஸில் ஷிப்னா,எஸ்.பாத்திமா அஸ்ஹா ஆகியோர் இணைந்திருந்தனர்.






