உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கப்படும் – கால்பந்து சுயேட்சை வேட்பாளர் எம்.ஏ.நளீர்
நாவிதன்வெளி பிரதேசத்தின் சாளம்பைக்கேணி வடக்கு வட்டாரத்தில் சுயேட்சை குழு -1 கால்பந்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் மக்கள் சந்திப்பு நேற்று (19) முதலாம் வட்டாரத்தில் சுயேட்சை வேட்பாளர் சவுதியா தலைமையில் இடம்பெற்றது.
சுயேட்சை குழு தலைமை வேட்பாளர் எம்.ஏ. நளீர் இங்கு விஷேட உரை நிகழ்த்தினார். அவர் தொடர்ந்து கூறுகையில்..
நாவிதன்வெளி பிரதேசத்தில் காணப்படுகின்ற குறைகளை உடனடியாக கண்டறிந்து அதற்கான தீர்வுகளை முன்னெடுக்கவும், மாணவர்களின் கல்விக்கு அரசாங்கம் வழங்கும் நிதிகளுக்கு மேலதிகமாக பல தொண்டு நிறுவனங்களின் நிதிகளை கொண்டு வந்து கல்வி நடவடிக்கைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவும், எமது பிரதேசத்துக்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவும், பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதைகளை புனர்நிர்மாணம் செய்து அவற்றுக்கான வீதி விளக்குகளை பொறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுயேட்சை தலைமை வேட்பாளர் எம் ஏ நளீர் தெரிவித்தார்.
மேலும் நாங்கள் ஆட்சி அதிகாரங்களில் இல்லாத போதும் வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு பல்வேறு வேலை திட்டங்களை செய்து காட்டியுள்ளோம். வீடமைப்பு, நீர் வளங்கள், மின்சாரம், வாழ்வாதார உதவிகள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு உதவி திட்டங்களையும் வழங்கி வந்துள்ளோம். தற்போது அதிகாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற போது உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பல்வேறு பணிகளை செய்ய தயாராகி வருகின்றோம்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் அமோக வாக்குகளின் ஊடாக வெற்றி பெற்று மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்ய எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். இதற்கான முழு அங்கீகாரத்திளையும் வழங்கி எங்களின் சுயேட்சை குழு-01 கால்பந்து சின்னத்திற்கு வாக்களித்து மக்கள் எங்களை வெல்ல வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் ஏ. கே அப்துல் சமத், நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுபைதீன் மற்றும் கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




( எ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் )