உள்நாடு

சர்வதேச தாதிய மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தெஹிவளையில் உள்ள சர்வதேச தாதிய மருத்துவ கல்லூரியின் 2024 மற்றும் 2025ஆம் கல்வி ஆண்டுக்காக தாதியர், உளவியல், மற்றும் மருந்தக கற்கைநெறிகளுக்கான டிப்ளோமா, உயர் டிப்ளோமாக்களுக்கான பட்டம் வழங்கும் வைபவம் சனி (19) பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ( பி.எம்.ஐ.சி.எச்) இல் நடைபெற்றது. இக் கல்லூரியின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரிமாஸா முனாப் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் . கௌரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, இலங்கை மாலைதீவு மலேசியா நாட்டின் கவுன்சிலர் மொஹம்மட் டியுமிங், விஞஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, அல் ஆலிமா வைத்தியர் மரீனா தாஹா றிபாய், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.எம்.எஸ். நபீஸ், மட்டக்கலப்பு இரீடா தொழிற்பயிற்சி நிலையத்தின் தலைவர் பொறியியலாளர் ரீ. மயுரன், மற்றும் எம்.எச்.எம்.. நிசார் பிரதி அதிபர் இப்பாகமுவ அல் அஸ்ரக் மா.. வித்தியாலயம் மற்றும் வாசனா பிரதம தாதியும் அதிதிகலாக கலந்து கொண்டு பட்டங்களின் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
அத்துடன் டொக்டர் மொஹமட் நிசார் மொஹமட் நஜாத் உயர் டிப்ளோமா உளவியல் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் பணிப்பாளர் ரிமாஸா முனாப் நிகழ்வில் கலந்து கொண்ட சகல அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவித்தார்.

இக் கல்லுாரி மட்டுமே தாதியத்துறையில் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மாணவியர்களுக்காக கடந்த 8 வருடங்களாக பொழும்பில் இயங்கிவரும் ஒரு சர்வதேச மருத்துவ தாதியர் கல்லுாரியாகும். இத்துறையில் கற்ற மாணவ மாணவிகள் மருத்துவ சாலைகளில் பெருமளவில் தொழில் பெற்றுள்ளதோடு உளவியல் துறையில் முன்னேறி வருவதைக் காணக்கூடியதாக பிரதி சபாநாயகர் அங்கு தெரிவித்ததார் அத்துடன் இலங்கை மருத்துவக் கல்லுாாி நைட்டா நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டால் இக் கல்லுாாி மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கும் தனியே ஒரு பெண்னாக இருந்து இக் கல்லுாாியை முன்னேடுத்துச் செல்லும் றிமசா முனாபின் திறமைகளை பாராட்டிப் பேசினார்கள்.

(அஸ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *