அல் மத்றஸதுல் பத்ரியாவில் ஹிப்ல் மாணவர்களுக்கு கெளரவம்
களுத்துறை மரிக்கார் வீதி அல் மத்ரஸதுல் பத்ரிய்யா ஹிப்ழ் மர்ரஸாவில் ஹிப்ழ் குர்ஆன் மனனத்தை முடித்துக்கொண்ட 16 மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவம் அதிபர் மௌலவி ஹாபிழ் அல் ஆலிம் முஹம்மத் சுபை (இல்மி) தலைமையில் மத்ரஸாவில் நடைபெற்றது.
உலமாக்கள், மத்ரஸா நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பகுதி நேர வகுப்பாக நடைபெறும் இந்த ஹிப்ழ் பிரிவில் வாழ்க்கைக்குத் தேவையான இஸ்லாமிய சட்டதிட்டங்கள், பிக்ஹு உட்பட ஒழுக்க விழுமியங்கள் பற்றிய போதனைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஐந்து வருட பாடத்திட்டம் கொண்ட இந்த பகுதிநேர வகுப்பில் ஐந்து வயது முதல் 11 வயது வரையான மாணவர்கள் இணைந்து கல்வி பெறுவதாக அதிபர் முஹம்மத் சுஐப் (இல்மி) தெரிவித்தார்.



(பேருவளை பீ.எம். முக்தார்)