மன்னம்பிட்டி கிறிஸ்தவ தேவாலயம் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு
மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தேவாலயத்தின் ஆயர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறதென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டின்போது உள்ளே எவரும் இருக்கவில்லை என்றும், ஜன்னல்களின் கண்ணாடிகள் மீதே குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது