ஜே.எம்.மீடியா நிறுவனத்தின் இலவச ஊடக செயலமர்வு
ஜே.எம்.மீடியா நிறுவனம் பத்தாவது வருடமாகவும் அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்துள்ள இலவச ஊடக செயலமர்வு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.
பத்து வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் நிலைத்து நின்று சாதனைகள் பல படைத்துள்ள இந் நிறுவனம் பல ஊடகவியலாளர்களையும் நற்பிரஜய் களையும் உருவாக்கியுள்ளது.
இந்த இலவச ஊடக செயலமர்வு தேசிய புகழ் பெற்ற பல ஊடகவியலாளர்களால் நடாத்தப்படவுள்ளதாக ஜே. எம்.மீடியா நிறுவனத்தின் தலைவரும்,ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்தீன் அவர்கள் தெரிவித்தார்.
ஆசிரியர்கள்,பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்,ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புவர்கள் ,ஊடக ஆர்வளர்கள்,சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் என 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.
முழுமையாக பங்கு பற்றும் அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலவச பதிவுகளுக்கு 0777l28348 இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம்.
(பாரா தாஹீர்)