பரகஹதெனிய தேசிய பாடசாலையின் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா
பறகஹதெனிய தேசிய பாடசாலையின் 2023 ம் ஆண்டிற்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் வைபவம் பறகஹதெனிய தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் அதிபர் ஐ.அப்துர் ரஹ்மான் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலை பறகஹதெனிய தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் பரிசில்கள் வழங்கி ஊக்க மூட்டப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் 100 க்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் பதக்கமும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களான
எம்.எச்.எம். தாரிக் ( 149)
எம்.எஸ்.எஸ். ஸஹீமா ( 150)
எம்.ஐ. ஹில்மா ( 152)
எம். ஆர். றிபாத் (159)
எம். எஸ். துர்ரா (163)
எம். ஆர். றுஹ்மா ( 165)
ஆர்.எப். பர்ஹா ( 169)
எம். எஸ். ஸஹீர் அஹமட் ( 188)
ஆகியோருக்கு சான்றிதழ், பதக்கம் என்பவற்றுடன் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் தரம் 5 இல் கல்வி கற்பித்த ஆசிரியர்களும் கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் தற்போது தரம் நான்கில் கற்கும், அடுத்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதிகளாக குருநாகல் கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர் எம். எச். எம். ஸலாஹுதீன், க/குருந்துகொல்ல மத்திய கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எம். பௌஸான், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ். அப்துர் றஹ்மான், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயற்குழு உறுப்பினர்கள்இபாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க நாட்காட்டி பதிப்பித்தல் செயற்றிட்டத்தில் உறுதுணையாக நிற்கும் அனுசரணையாளர்கள் ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பழைய மாணவர் சங்க செயற்குழு சார்பில் பழைய மாணவர் சங்க உபதலைவரும் கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான எம்.எஸ்.எம். நவாஸ், பழைய மாணவர் சங்க உப தலைவர் எஸ். ஏ.எம். ஷஹீத், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் பாஹிம் அமானுல்லா மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு லைவ் பிளஸ் நேரலை தொழிநுட்ப குழுவின் உதவியோடு Past Pupil’s Association-Paragahadeniya Central College உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கத்தினூடாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.





(அஹ்ஸன் அப்தர்)