அம்பாறை மாவட்டத்தில் றிஷாத் தீவிர பிரச்சாரம்.
அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
அந்தவகையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 09 உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, தனது மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.