நாட்டு மக்களின் நலன்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் சஜித் பிரேமதாசா
“சஜித் பிரேமதாச இந்த நாட்டு மக்களின் நலன்களின் மீது பெரும் அக்கறையுள்ள ஒருவராகவும், சுபிட்சமுள்ள நாடாக திகழ வேண்டும் என்பதை உண்மைக்கு உண்மையாக கனவு கண்ட ஒரு தலைவராகவும் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.எம்.சமீம் தெரிவித்தார்
அக்கரைப்பற்றில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்ட சஜித் பிரேமதாச இந்த நாட்டு அரசியல்வாதிகளில் கறை படியாத கரங்களைக் கொண்ட ஒரு தலைவராவார்,இன மத பேதமற்ற, சமூக வேறுபாடுகளற்ற, பொய், களவு, ஊழலற்ற ஒரு நேர்மையான அரசியல்வாதியாக அவர் திகழ்ந்து வருகிறார். அதனால்தான் அதிகளவான மக்கள் இங்கு வருகை தந்திருக்கின்றனர்.
சிறந்த அரசியல் பின்புலத்தைக் கொண்ட ஒரு தலைவரின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நாடு முழுவதும் அதிகளவானோர் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் அதிகமான உள்ளூராட்சி மன்ற சபைகளையும் கைப்பற்றக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
எனவே தங்களுடைய பெறுமதியான வாக்குகளை இத்தேர்தலில் அதிகப்படியாக ஐக்கிய மக்கள் சக்தியான டெலிபோன் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தங்களது பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சபைகளையும் வென்றெடுத்து ஆட்சி அமைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(றிபாஸ்)