தேர்தல் பணிகளை மருதானையில் ஆரம்பித்த பேருவளை முன்னாள் நகரபிதா
பேருவளை நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் முன்னால் நகர பிதா மஸாஹிம் முஹம்மத் தனது தேர்தல் பிரச்சாரப் பணியை 15 ஆம் தேதி ஆரம்பித்தார்.
மருதானை வட்டாரத்தில் போட்டியிடும் முன்னால் நகர பிதாவுக்கு பிரதேசவாழ் மக்கள் பெரு வரவேற்பளித்தனர்.
அவர் தனது ஆதரவாளர்கள் சகிதம் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து கூடிய சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இத்தேர்தலில் போட்டியிடும் மசாஹிம் முஹம்மதுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரதேசவாழ் மக்கள் இதன்போது வாக்குறுதியளித்தனர். எல்லா வேற்றுமைகளையும் மறந்து கட்சி பேதமின்றி மருதானை வட்டார மக்கள் தனக்கு வழங்கும் ஆதரவுக்கு மசாஹிம் முஹம்மது நன்றி தெரிவித்தார்.
இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியானது ஒன்பது வட்டாரங்களையும் மிக இலகுவாக வெற்றிகொண்டு தனியாக ஆட்சியமைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மாற்றுக் கட்சியினர் போலி பிரச்சாரங்களை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை தடுக்க முயன்ற போதிலும் மக்கள் எம்முடனே கைகோர்த்துள்ளனர் என்றார்.
மருதானை வட்டார மக்கள் என் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் பாசத்திற்கும் நன்றிக் கடனாக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பேன். நான் பிறந்து வளர்ந்த இந்த பூமியை முன்னேற்றுவது எனது கடமை. கடந்த காலத்தில் நகர சபை தலைவராக பதவி வகித்து உச்ச சேவைகளை பெற்றுக் கொடுத்தேன்.
வீணாக சேறு பூசி எமது வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இப்பகுதி வால்மக்கள் எனது வெற்றிக்காக அணி திரண்டுள்ளனர். இது மகிழ்ச்சிக்குறியதாகும் என்றார்.
(பேருவளை பி.எம் முக்தார்