சட்டத்தரணி தொழிலில் பொன் விழா
பாணந்துறை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி தம்சிரி பொன்சேகா சட்டத்தரணி தொழில் துறையில் ஐந்தாண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு பாணந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் முன்னாள் அமைச்சர் அஜித் பெரேரா தலைமையில் பொன் விழா பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சட்டத்தரணிகள் சங்க பணிமனையில் பொன்விழா கொண்டாடும் சட்டத்தரணியின் உருவப்படம் ஒன்று சங்க தலைவரினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பெருமளவிலான சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.


( எம்.எஸ்.எம்.முன்தஸிர்)