களுத்துறை மா நகர சபையை முஸ்லிம் காங்கிரஸிடம் ஒப்படைக்க மக்கள் ஓரணி திரண்டுள்ளனர்.மேயர் வேட்பாளர் ஆமிர் நஸீர்.
களுத்துறை மாநகரசபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் ஒப்படைக்க பிரதேச வாழ் மக்கள் சகல வேற்றுமைகளையும் மறந்து இன்று ஓரணியில் ஒன்று திரய்டுள்ளதாக மாநகரசபை தலைமை வேட்பாளர் முன்னாள் நகர பிதா ஆமிர் நஸீர் கூறினார்.
களுத்துறை ஹீனட்டியன் கல பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உறையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். நஸீர் ஹாஜியார் உட்பட பல வேட்பாளர்கள் உரையாற்றிய இக்கூட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
ஆமிர் நஸீர் மேலும் கூறியதாவது,
களுத்துறை மாநகரசபை மேயர் பதவியை பெற்றுக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக களுத்துறை வாழ் மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். இத் தேர்தலில் எனது தலைமையில் தலைசிறந்த மக்கள் ஆதரவு உள்ள குழுவொன்று களமிறங்கியுள்ளது. நாளுக்கு நாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான மக்கள் ஆதரவு பெருகிவருகிறது.
எனது தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாகும். மூவின மக்களினது ஆதரவு எமக்குள்ளது. களுத்துறை மாநகர சபை பகுதியில் உள்ள கூடுதலான வட்டாரங்களை கைப்பற்றி ஆட்சியமைப்போம். எமது வெற்றி அநீதிக்கு எதிரான வெற்றியாகும். அதை நன்கு புரிந்து கொண்ட களுத்துறை வாழ் மக்கள் எம்மோடு கை கோர்த்துள்ளனர்.
களுத்துறை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தியாலோ, ஐக்கிய மக்கள் சக்தியாலோ வேறு குழுக்களினாலோ இலகுவாக வெற்றிகொள்ள முடியாது.
எனது தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ{க்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதனால் இந்த இரு கட்சிகளும் எம்மை வீழ்த்த சதி முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த சதி முயற்சிகளை மே 6ம் திகதி மக்கள் முறியடிப்பார்கள்.
களுத்துறை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதன் மூலம் இப் பகுதி வாழ் சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு இன, மத, மொழி, கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகளின்றி சேவைகளைப் பெற்றுக்கொடுப்போம்.
களுத்துறை நகர சபை தலைவராக பதவி வகித்து அப்பதவி மூலம் பாரிய பணிகளை மக்களுக்குச் செய்துள்ளேன். நீதியானதும், தூய்மையானதுமான எனது சேவையை மக்கள் விரும்புகின்றனர். அதைனாலேயே இத்தேர்தலிலும் மக்கள் என்னுடன் கைகோர்த்துள்ளனர். நான் மக்களுடனே என்றும் இருப்பவன்.
இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியாலோ, தேசிய மக்கள் சக்தியாலோ நிச்சயமாக வெற்றிகொள்ள முடியாது என்பதை மக்கள் நன்கு புரிந்துள்ளனர்.
இந்த மாநகர சபபையின் மேயர் பதவியை ஸ்ரீ;லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். எனவே உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாது புத்திசாலித்தனமாக நடந்து எமக்கு வழங்கி கூடிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முயலுங்கள் என்றார்.
(பேருவளை பி.எம் முக்தார்)