தொடரும் நில அதிர்வுகள்; இன்றும் பல நாடுகளில் நில நடுக்கம்
தென்னிந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
எனினும், சுனாமி எச்சரிக்கைகள் அல்லது ஆலோசனைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இதற்கிடையில், தெற்கு பிலிப்பைன்ஸிலும் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் அந்த நாடுகளில் சொத்துக்கள் அல்லது உயிர் இழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.