நாயக்கர்சேனை கிராம சமூகத்தின் பொன் எழுத்தாக அமைந்த பாடசாலையின் இரு மாடி கட்டிடத் திறப்பு விழா..!
கற்பிட்டி நாயக்கர்சேனை அரசினர் இந்து தமிழ் ( நாவுக்கரசர் வித்தியாசாலை) வித்தியாலயத்திற்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் ( ஐ.எம்.எச்.ஓ) முழுமையான நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட
இரு மாடி கட்டிடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை (10) பாடசாலையின் அதிபர் வீ.ராமநாதன் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கற்பிட்டி நாயக்கர்சேனை அரசினர் இந்து தமிழ் (நாவுக்கரசர் வித்தியாலய) வித்தியாலயத்தின் இந்த நிகழ்வு இந் நாயக்கர்சேனை கிராம சமூகத்தின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் எனவும் 1960/09/30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நாவுக்கரசர் வித்தியாலயம் வரலாற்றை பரைசாற்றும் முகமாக இந்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இரண்டு மாடி கட்டிடத்தின் அடிக்கல் 2024/09/30 ம் திகதி நாட்டப்பட்டதும் சிறப்புக்கள் நிறைந்து எனவும் பாடசாலையின் அதிபர் வீ.ராமநாதன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
நாயக்கர்சேனை மக்களின் வரலாற்று நிகழ்வாக இடம்பெற்ற பாடசாலை கருமாரி கட்டிடத் திறப்பு விழாவின் பிரதம அதிதிகளாக புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம் அனீஸ மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதி கல்வி பணிப்பாளர் என்.எம்.ஆர் தீப்தி பெர்ணான்டோ கௌரவ அதிதிகளாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர் வைத்தியர் எஸ் தேவேந்திரன் மற்றும் ஐ.எம்.எச்.ஓ. அமைப்பின் தலைவர் ராஜம் தேவேந்திரன் சிறப்பு அதிதிகளாக மாகோ கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.எச் றிஸ்வி, புத்தளம் வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் கமலேந்திரன், கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எம் ஜவாத், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கை வதிவிடம் பணிப்பாளரும் ஓய்வு பெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் எம். ராதாகிருஷ்ணன் , ஓய்வு. பெற்ற அதிபர் வீ நடராசா, புத்தளம், சிலாபம் வலயத்தின் பாடசாலை அதிபர்கள், நாவுக்கரசர் வித்தியாலய ஸ்தாபகரின் குடும்ப உறுப்பினர்கள் பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி லில்லி ஜெயசீலன் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்துடன் பாடசாலை சார்பாகவும் நாயக்கரசேனை சமூகம் சார்பாகவும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் தலைவர் மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசிலகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)






