பேருவளை நகர சபையை ஐ.ம.சக்தி வெல்லும்..! -சமூக சேவையாளர் அப்துர் ரஹீம்.
பேருவளை நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி ஒன்பது ஆசனங்களையும் வெற்றி கொண்டு தனியான ஆட்சியமைக்கும் என சீனங்கோட்டை கன்கானங்கொடை வட்டார வேட்பாளரும் பிரபல சமூக சேவையாளரும் அப்துர் ரஹீம் முஹம்மத் சுபியான் தெரிவித்தார்.
பேருவளை கன்காணங்கொடையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உறையாற்றினார்.
பெருமளவிலான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் முஹம்மத் சுபியான் மேலும் கூறியதாவது கன்காணங்கொடை வட்டாரம் இரட்டை தொகுதி அங்கத்தவர்களை உள்ளடக்கிய வட்டாரமாகும். என்னுடன் இணைந்து ருஹுனு பல்கலைக்கழக பட்டதாரியான இமல்சியஸோரா போட்டியிடுகிறார். இப்பகுதி வாழ் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக வேண்டி இன்று எம்மோடு அணிதிரண்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரியதாகும்.
மூவின மக்களின் ஆசீர்வாதத்துடன் நாம் இருவரும் இத்தேர்தலில் கலமிறங்கியுள்ளோம் எமது அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் நகர சபை பகுதி 9 வட்டாரத்திற்கும் தகுதியும் திறமையும் உள்ள வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். சமூகத்திற்காக இரவு பகல் பாராது சேவை செய்யக்கூடிய, சமூகத்தில் நன்மதிப்பு பெற்றவர்களை, எல்லாச் சவால்களுக்கும் தைரியமாக முகம் கொடுக்கக்கூடிய சிறந்த வேட்பாளர் குழு இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்றனர். இதனால் அதிக வாய்ப்பு எமது கட்சிக்குள்ளது.
கன்கானங்கொடை பகுதி மக்களின் பிரச்சிணைகள், தேவைகளை நாம் நன்கு அறிவோம். நகர சபை ஊடாக மக்களுக்கு திருப்திகரமான பணிகளை செய்து கொடுப்போம்
(பேருவளை பீ.ம்.முக்தார்)