மாத்தளை, உக்குவளை பிரதேச எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான கலந்துரையாடல்
மாத்தளை , உக்குவளை ஆகிய பிரதேசங்களிலுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று விரைவில் மாத்தளையில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை எழுத்தாளர்கள் சம்மேளணத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவஹுவ நிஜாமுதீனின் ஆலோசனையிலும் தலைமையிலும் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் முக்கிய பிரமுகர்கள் சிலரும் கலந்துகொள்வதுடன் பிரதேசங்களின் எழுத்தாளர்கள் கலைஞர்கள் தமது துறைகளில் எதிர்நோக்கும் சங்கடங்களை இனம்கண்டு அவற்றை நிவர்த்தித்து அத்துறைகளினூடாக அவர்களை ஊக்குவித்து அத்துறைகளைக் கொண்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றியும் இதற்கமைய முதலாவது கலை நிகழ்ச்சியை மாத்தளையிலும் இரண்டாவது கண்டியிலும் நடாத்துவது பற்றியும் மேலும் இத்துறைகளில் தடம்பதித்தவர்கள் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளனஎனவே இதில் பங்குபற்ற விரும்பும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் தொடர்புகொண்டு தம்மை பதிவுசெய்துகொள்ளலாம் வளரும் இளம் எழுத்தாளர்கள் கலைஞர்களும் இதில் பங்குபற்றலாம்.
தலைவர்அகில இலங்கை எழுத்தாளர்கள் சம்மேளணம்4/9 , புலன்வெவதேவஹுவ கலேவெல