அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நல்ல வாழ்க்கை, வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தலைமுறையை உருவாக்கும் மாநகர சபையை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.
கொழும்பு மாவட்டத்தை மக்களுக்கு சௌபாக்கியமும் அபிவிருத்தியும் நிறைந்த நகரமாக மாற்றுவது ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக வலுவான தலைமுறை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மத்திய கொழும்பு ஜிந்துபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத்திலும், டிஜிட்டல் வசதிகளிலும் புரட்சியை ஏற்படுத்தி, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை காலத்திற்கு ஏற்றாற் போல் மேம்படுத்தவும், மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல வீடு மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்றுத் தரவும் புதிய வழிமுறைகளை நாம் பயன்படுத்துவோம்.
அந்தப் பொறுப்பை நேர்மையாகவும், தூய்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்போம். மேலும், மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கும் வகையில் மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புள்ள மாநகர சபையை உருவாக்குவோம். பிரச்சினைகளுக்கு பதில் வழங்கும் மாநகர சபையாக கொழும்பு மாநகர சபையை நாம் மாற்றுவோம். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.




