காதி நீதவான் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
உக்குவல நிருபர் நீதிச்சேவை ஆணைக்குழு வெற்றிடங்களாகவுள்ள பின்வரும் பிரதேசங்களுக்குப் புதிதாக தகுதியுள்ளவர்களிடமிருந்து காதிநீதவான் பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
பேருவல , உடதலவின்ன ( உட , மெத , பஹத்த தும்புற )) , யாழ்ப்பாணம் , கொழும்பு தெற்கு ,புத்தளம் — சிலாபம் ,காத்தான்குடி , சம்மாந்துரை , மாத்தளை , மாவனெல்ல ,காதிநீதவான் மாதாந்த கொடுப்பனவாக ரூபா 7.500 உதவித்தொகையாக மற்றும் உதவியாளர் சேவை , அஞ்சல் மற்றும் எழுதுகருவிகளுக்கான செலவுத் தொகையாக ரூபா 6.250 வுடன் மொத்தமாக ரூபா 13.750 கொடுப்பனவாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலதிக தகவலுக்காகவும் விண்ணப்பிக்கும்முறை பற்றிய விபரங்களுக்கும் கடந்த மார்ச் 28 ந்திகதிய வர்த்தமாணியைப் பார்வையிடலாம் விண்ணப்ப இறுதி திகதி இம்மாதம் 30ம் திகதியாகும்.