தேசபந்து தென்னக்கோன் பிணையில் விடுதலை
கண்டி போகம்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த தேசபந்து தென்னக்கோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது தலா இரண்டு 10 இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.